சுதந்திரதினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்
சுதந்திரதினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 உரிமஸ்தலங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தால் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story