டாஸ்மாக் பணியாளர்கள் ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில மாநாடு கடலூரில் வருகிற 28-ந் தேதி நடக்கிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், அரசு பணியாளர் சங்க முன்னாள் பொது செயலாளர் கணேசன், நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மருதலிங்கம் ஆகியோர் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story