டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும்
கம்பம் புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி
கம்பம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து குமுளி, கட்டப்பனை, எர்ணாகுளம், சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும். இவையில்லாமல் கேரள மாநிலம் சபரிமலை செல்லும் பக்தர்கள் கம்பம் வந்து செல்கின்றனர். இந்த பஸ்நிலையம் அருகே 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த கடைகளில் பார் வசதி இல்லாததால் மதுபானங்களை வாங்கி பஸ்நிலையம் செல்லும் சாலையில் நின்று திறந்தவெளியில் அருந்துகின்றனர். இதனால் அந்த வழியாக பஸ்நிலையத்துக்கு பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பஸ்நிலையம் பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story