விபத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் பலி


விபத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் பலி
x

ராதாபுரம் அருகே விபத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் பலியானார்.

திருநெல்வேலி

ராதாபுரம்:

கூடங்குளம் புள்ளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 51). இவர் ராதாபுரம் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக உள்ளார். இவர் சம்பவத்தன்று ராதாபுரத்தில் இருந்து கூடங்குளம் செல்லும் பாதையில் நக்கநேரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் ெசன்று கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் குறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story