டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

குன்னூர்,

தமிழகத்தில் டாஸ்மாக் குடோனில் ஒரே மாதிரியான ஏற்று கூலியை நிர்ணயிக்க வேண்டும். நிரந்தர வைப்புத்தொகை மற்றும் இ.எஸ்.ஐ.-க்காக பிடித்தம் செய்யப்படும் தொகையை தொழிலாளர்கள் வங்கி கணக்கில் சரியாக செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், குன்னூர் எடப்பள்ளி பகுதியில் டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நீலகிரி மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விஜி தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, லிக்கர் மற்றும் பீர் பெட்டிக்கு சுமை தூக்கும் கூலியாக உள்ள ரூ5.50 என்பதை ரூ.8 ஆக உயர்த்த வேண்டும். குடோன் விட்டு குடோன் மாற்றும்போது ஒரு பெட்டிக்கு ரூ.10 என்பதற்கு பதிலாக ரூ.15 கொடுக்க வேண்டும் என்றனர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வினோத், பொருளாளர் நவீன் சந்திரன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் மகேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story