டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்
டாஸ்மாக்தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என மாநில பொதுச்செயலாளர் கூறினார்.
சிவகாசி,
டாஸ்மாக்தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என மாநில பொதுச்செயலாளர் கூறினார்.
மாவட்ட மாநாடு
விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் 5-வது மாவட்ட மாநாடு சிவகாசியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சின்னராஜ் வரவேற்றார். கோவிந்தசாமி, குமார், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில சம்மேளனத்தின் பொது செயலாளர் திருச்செல்வம் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும்.
வருவாய் இழப்பு
குறைந்த பட்சமாக ரூ.35 ஆயிரம் மாத சம்பளம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 5,400 பார்களில் 2,500 பார்கள் மட்டும் ஏலம் விடப்பட்டுள்ளது. மற்ற பார்கள் ஏலம் விடப்படாமலேயே செயல்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பாடுகிறது. பணம் வாங்கி கொண்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு இடமாற்றம் செய்து கொடுப்பதாக தகவல் வருகிறது. முறையற்ற இடமாறுதல் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் பார்களை எடுத்து உள்ளனர். குறிப்பாக பெண்கள் பெயரில் அதிகளவில் பார்கள் எடுக்கப்படுகிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.