தட்கல் டிக்கெட் முன்பதிவு இடமாற்றம்


தட்கல் டிக்கெட் முன்பதிவு இடமாற்றம்
x

நெல்லை ரெயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 2 நுழைவு வாசல்களில் டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. மேலும் புதிய நுழைவு வாசலில் இருந்த தட்கல் டிக்கெட் முன்பதிவு மையத்தை, பழைய நுழைவு வாசலுக்கு சமீபத்தில் மாற்றினார்கள். இதனால் பயணிகள், ஊழியர்கள் பல்வேறு குழப்பங்களை சந்தித்தனர். இந்த நிலையில் மீண்டும் தட்கல் முன்பதிவு மையம் புதிய நுழைவு வாசல் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.



Next Story