'டாட்டூ'-இளைஞர்களின் பச்சைகுத்தும் மோகம் அழகானதா? ஆபத்தானதா?


டாட்டூ-இளைஞர்களின் பச்சைகுத்தும் மோகம் அழகானதா? ஆபத்தானதா?
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘டாட்டூ’-இளைஞர்களின் பச்சைகுத்தும் மோகம் அழகானதா? ஆபத்தானதா? என்று டாக்டா்கள் கருத்து ெதாிவித்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி

டாட்டூ.

இந்த சொல் இன்றைய இளைஞர்களின் மந்திர சொல்லாக மாறி வருகிறது. ஆன்ட்ராய்டு போன் இல்லாத இளைஞர் ஒருவரை கூட காண முடியாது என்ற ரீதியில் தான் இன்றைய டாட்டூ மோகமும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

பச்சை குத்துதல்

நமது தாத்தா, பாட்டி போன்ற மூதாதையர்கள் காலத்தில் பச்சை குத்திக்கொள்வது என்பது நம் நாட்டின் பாரம்பரிய பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்துள்ளது. குறிப்பாக அந்த காலத்து பெண்கள் தங்கள் கணவர் பெயரை கூறக்கூடாது என்பதற்காக அதை கைகளில் பச்சை குத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். யாராவது கணவர் பெயரை கேட்டால் அந்த கால பெண்கள் கையை காட்டுவார்கள்.

இது மாற்றம் பெற்று அடுத்து வந்த காலக்கட்டங்களில் கணவர் பெயரை பச்சை குத்தும் நடைமுறை சடங்கு, சம்பிரதாயமாக மாறி போய் இருந்தது. பின்னர் படிப்பறிவு, நாகரிக வளர்ச்சியால் பழங்கால பச்சை குத்தும் மரபு குறைய தொடங்கியது. பெண்கள் தங்கள் கணவர் பெயரை கூறுவதற்கு தயக்கம் காட்டும் நிலை கடந்து போனது. இவ்வாறு பழங்கால பச்சை குத்தும் நடைமுறை குறைந்து போன அதேவேளையில், அது இன்றைக்கு கால மாற்றத்தில் மேற்கத்திய கலாசாரம் என்ற பெயரில் டாட்டூவாக புது வடிவம் பெற்று விட்டது.

நடிகர், நடிகைகள்

இந்தியாவில் பிரபலமாக பல பாலிவுட் பிரபல நடிகர், நடிகைகள் தங்கள் காதலர்கள் பெயரை டாட்டூவாக குத்திக்கொண்டது டாட்டூவின் மீது இளைஞர்கள் குறிப்பாக இளம்பெண்களின் கவனத்தை ஈர்க்க ெதாடங்கியது என கூறலாம். இன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு வீரர்கள் என்று பலரும் டாட்டூ குத்திக்கொண்டு டாட்டா காட்டுவது ஒரு ஸ்டைலாக தான் மாறி விட்டது.

குறிப்பாக இளம்பெண்கள் தங்கள் அழகுக்கு அழகு சேர்க்க ெமகந்தி இடுவதையும், டாட்டூஸ் (பச்சை குத்துதல்) வரைந்து கொள்வதையும் நாகரிகத்தின் அடையாளமாக பார்க்கிறார்கள். முதலில் பெயரை மட்டுமே டாட்டூஸ் குத்திய இளைஞர்கள், இளம்பெண்கள் தற்போது கை, கால் தொடங்கி உடலில் பல்வேறு இடங்களில் விதவித வண்ணங்களில் டாட்டூஸ் வரைவது தற்போது பேஷனாகி விட்டது.

அழகானதா? ஆபத்தானதா?

இந்த டாட்டூ குத்துவது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். டாட்டூ கிரைன்லோமா, டாட்டூ ட்யூபர்க்ளோசிஸ், டாட்டூ சர்காயடேசிஸ், பங்கல் இன்பெக்ஷன் போன்ற பல விதமான தோல் நோய்கள் இந்த டாட்டூவால் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இளைஞர்களின் டாட்டூஸ் மோகம் அழகானதா? அல்லது ஆபத்தானதா? என்று இளைஞர்கள், டாக்டர்கள் கூறிய கருத்துளை காண்போம்.

ஒவ்வாமை ஏற்படலாம்

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறப்பு தோல் நோய் சிகிச்சை பிரிவு உதவி பேராசிரியர் டாக்டர் சுகந்தி:-

இன்று டாட்டூ பச்சை குத்துவது இளைஞர்கள் மத்தியில் பரவலாகவும், இது ஒரு கலையாகவும், சுய வெளிப்பாட்டு கருவியாகவும் வளர்ந்து வருகிறது. பச்சை குத்திக்கொள்ளும் முன், மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள், டாட்டூ எளிதில் அழிக்கக்கூடியது அல்ல இது தேவைதானா? நாம் இதற்கு தயாராக இருக்கின்றோமா? என்பதை சிந்திக்க வேண்டும். பச்சை குத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை அறிந்து தெரிந்துகொள்ள வேண்டும். பச்சை குத்த பயன்படுத்தும் மை ஒரு சிலருக்கு உடனடியாகவோ, பல நாட்களுக்குப் பின்னரோ சிவப்பு, நீலம், பச்சை நிறங்களின் மூலம்'ஒவ்வாமை ஏற்படலாம். மற்றும் சுத்திகரிக்கப்படாத ஊசிகள் அல்லது தரமற்ற மைகள் பயன்படுத்துவதன் மூலம் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படலாம், சில சமயங்களில் தழும்புகளும் வரலாம். பின்நாட்களில் ஏதேனும் உடல்நல காரணத்திற்காக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ய நேர்ந்தால் பச்சை குத்திய இடத்தில் எரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். ஆகவே அழகான டாட்டூக்களை போட்டுக்கொள்ளும் முன் இளைஞர்கள், அதன் ஆபத்துகளையும், அதை தவிர்க்கும் முறைகளையும் அறிந்து செயல்பட வேண்டும்.

ஆபத்து இல்லை

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த டாட்டூ வரையும் கலைஞர் பிரவீண்குமார்:-

ஐ.டி.ஐ. முடித்துள்ள நான் கடந்த 5 ஆண்டுகளாக டாட்டூஸ் குத்தும் கடை நடத்தி வருகிறேன். தற்போது விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் கடை நடத்தி வருகிறேன். 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் டாட்டூ பச்சை குத்தி வருகிறேன். மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி தனித்துவமாக காட்டிக்கொள்வதற்காக இளைஞர்கள் பலரும் டாட்டூ வரைந்துகொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இது வரைவதால் ஆபத்தா? என்று கேட்டால் என்னை பொறுத்தவரை இல்லை என்றுதான் சொல்வேன். ஒருவருக்கு பயன்படுத்தும் ஊசியை மற்றவர்களுக்கு பயன்படுத்தும்போதும், ஒருவருக்கு பயன்படுத்தும் மையை மற்றவர்களுக்கு பயன்படுத்தும்போது ரத்தம் மூலமாக தோல் அலர்ஜி உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நான் அதுபோன்று செய்வதில்லை. ஒருமுறை பயன்படுத்தும் ஊசி, மை உள்ளிட்ட பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுவேன், மற்றவர்களுக்கு அதை பயன்படுத்த மாட்டேன். இதனால் என்னிடம் நிறையபேர் டாட்டூஸ் குத்திக்கொள்வதற்காக ஆர்வமுடன் வருகின்றனர். சிலர் யூடியூப் பார்த்துக்கொண்டும், 15 நாளில் பெயரளவிற்கென்று பயிற்சி எடுத்துவிட்டு நானும் கற்றுக்கொண்டேன் என்று சொல்லிக்கொண்டு டாட்டூஸ் வரைகின்றனர். அதுபோன்றவர்களிடம் டாட்டூஸ் வரையும்போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். முறையாக பயிற்சி பெற்றவர்களிடம் டாட்டூஸ் குத்தினால் மிகவும் அழகாகவும் இருக்கும். உடலில் எந்தவித தோல் அலர்ஜி உள்ளிட்ட பாதிப்பும், தீங்கும் ஏற்படாது.

வலி அதிகமாக இருக்கும்

திண்டிவனம் வக்கீல் சி.பி.சண்முகம்:-

நம்முடைய பாரம்பரிய பழக்க, வழக்கம் பச்சை குத்திக்கொள்வதாகும். நான் எனது இடது கையில் 2 ஏறுகெண்டை இறங்கு கெண்டை மீன்களையும், 2 தேள்களையும் பச்சை குத்தியுள்ளேன். உடலில், பச்சை குத்திக்கொள்வது அக்குபஞ்சர்போல் உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும். பச்சை குத்திக்கொள்ளும்போது வலி அதிகமாக இருக்கும். பச்சை குத்துபவர்கள் தன்னுடைய அக்குளில் கையை இடுக்கி வைத்து பிடித்துக்கொள்வார்கள். பச்சை குத்தும்போது வலி ஏற்படுவதால் கை இழுத்தால் சரியாக குத்த முடியாது என்பதால் இறுக்கி பிடித்து வைத்துக்கொள்வார்கள். பச்சை குத்திக்கொள்வது உடலுக்கு அழகையும், வலிமையும் தரும் என்பதால் நமது முன்னோர்கள் பலர் பச்சை குத்திக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இது ஒரு அடையாளமாக உடலில் அமைந்து விடுவதால் ராணுவத்தில் சேர்ப்பதில்லை. நாளடைவில் அது டாட்டூ போன்ற வேதியியல் பொருட்களால் சித்திரங்கள் வரையப்படுகிறது. இது சிலருக்கு அழகாகவும், சிலருக்கு உடல் பாதிப்பைம் ஏற்படுத்துகிறது.

அழகுக்காக வரைகிறார்கள்

மேல்மலையனூர் அருகே வளத்தியை சேர்ந்த ராகுல்:-

இன்றைய இளைஞர்கள் பச்சை குத்திக்கொள்வதும், டாட்டூ வரைந்து கொள்வதும் அழகுக்காகத்தான். இதில் ஏதும் ஆபத்து இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பச்சை குத்தும்போது லேசான வலி இருக்கும். 2 நாளில் அது சரியாகிவிடும். சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதும் உண்டு. இதனால் காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஓரிரு நாளிலேயே சரியாகிவிடும். இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக இளம்பெண்களும் பச்சை குத்திக்கொள்கின்றனர், டாட்டூ வரைந்து கொள்கின்றனர். ஆபத்து இருந்தால் இதுபோல் செய்வார்களா? ஆகவே இரண்டுமே அழகுக்காகவே செய்துகொள்கின்றனர்.

ஆபத்தானதாகத்தான் முடியும்

செஞ்சியை சேர்ந்த கார்த்தி:-

டாட்டூ போடுவதால் அழகானதும் இல்லை, ஆபத்தானதும் இல்லை. இளைஞர் மத்தியில் இது ஒரு பரபரப்புதான் என்று நான் சொல்வேன். டாட்டூ என்பது அவர்கள் பெயர்கள் அல்லது புகைப்படங்கள் போன்றவற்றையெல்லாம் இப்போது டாட்டூவாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அதை அழகாக வர்ணித்து போட வேண்டுமென்றால் கையில் அல்லது நமக்கு தேவையான இடங்களில் பச்சை குத்தும்போது சிறிய அளவில் டாட்டூ போட்டுக்கொண்டால் அது அழகானதாக மட்டும்தான் இருக்கும். ஆனால் சில பேர் மார்பிலும், உடலில் கைகளை தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் டாட்டூ போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் இது ஆபத்தானதாகத்தான் முடியும். டாட்டூ என்பது கையில் பெயர்களோ அல்லது புகைப்படங்களையோ சிறிய அளவில் போட்டுக்கொண்டால் அது அழகுக்கு மட்டும்தான் சேரும் என்பதே என்னுடைய கருத்து.

ஆர்வம்

தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்:-

நான், தியாகதுருகம் பஸ் நிறுத்தம் பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளேன். எனக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சை குத்துவதில் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் நான் பச்சைகுத்திக் கொண்டேன். இதைத்தொடர்ந்து பலருக்கும் பச்சை குத்திவிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. எனவே சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு மாதம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக பலருக்கும் பச்சை குத்தி வருகிறேன். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட காதலன், காதலிகளுக்கு இனிஷியல் போடுதல், கணவன், மனைவி இனிஷியல் போடுதல் மற்றும் இளைஞர்களும் இளம்பெண்களும் பென்ஸ் கார், டிராகன், மயில் இறகு உள்ளிட்ட பல்வேறு படங்களை அவர்களுக்கு பச்சை குத்தி விடுகிறேன். இதற்கு குறைந்த பட்சம் ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 500 வரை கட்டணமாக பெற்றுக் கொள்வேன். இதில் குறைந்த அளவு வருமானம் கிடைத்தாலும் பச்சை குத்தும் தொழில் மீது உள்ள ஆர்வத்தால் தொடர்ந்து செய்து வருகிறேன்.

ஆசிர்வாதம்

தியாகதுருகம் திருவள்ளூர் நகரை சேர்ந்த வேல்நம்பி:-

எனக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் மீது அதீதபக்தி உண்டு. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது வலது கையில் சிவனை பச்சையாக குத்தி உள்ளேன். இதனால் எப்பொழுதும் அண்ணாமலையாரின் ஆசீர்வாதம் எனக்கு இருப்பதாக உணர்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வலி, வேதனை கலந்த டாட்டூ

டாட்டூ மோகம் இளைஞர்களை ஆட்டிப்படைக்க சினிமா நடிகர், நடிகைகள் முக்கிய காரணம் என்றாலும் இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் தங்கள் அன்பை குறிப்பாக காதலை வெளிப்படுத்த டாட்டூ குத்திக்கொண்டு சிக்கலிலும் சிக்கி கொள்கிறார்கள். தங்களுக்கு காதலன், காதலி பெயரை

They get tattooed on their body and then when love doesn't work out, they suffer from not being able to erase the tattoo. Although tattoo removal can be done with laser therapy, the younger generation needs to understand that the pain, suffering, and morbidity associated with the removal treatment are high. Also, if the government takes steps to get tattoo centers approved and operate like in foreign countries, there is a chance that those who get tattooed will escape from the effects of the disease.


Next Story