காரிமங்கலம் பேரூராட்சியில் வரி பாக்கிகளை 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்-செயல் அலுவலர் எச்சரிக்கை
காரிமங்கலம்:
காரிமங்கலம் ேபரூராட்சி தலைவர் மனோகரன், செயல் அலுவலர் ஆயிஷா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. தற்போது காரிமங்கலம் பேரூராட்சியில் வரி வசூல் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி மாவட்ட கலெக்டர் அறிவிப்பின்பேரிலும், பேரூராட்சி உதவி இயக்குனர் ஆலோசனையின் பேரிலும் வரி வசூல் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள், வணிகர்கள் தங்களது சொத்து வரி, தொழில் வரி, கடை வாடகை மற்றும் வீட்டு வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்தி பேரூராட்சி நிர்வாகத்தில் மக்கள் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது வரி மற்றும் வரி பாக்கி ஆகியவற்றை உரிய காலத்திற்குள் செலுத்தி சட்டபூர்வ நடவடிக்கையை தவிர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.