சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று வரி வசூல் மையம் செயல்படும்-ஆணையாளர் தகவல்
சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று வரி வசூல் மையம் செயல்படும் என்று ஆணையாளர் அறிவித்து உள்ளார்.
சேலம்
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் தீவிர வரி வசூல் பணி நடைபெற்று வருகிறது. பொது மக்களின் வசதிக்காகவும், அவர்களது நலன் கருதியும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி, கடை வாடகை மற்றும் குத்தகை உரிம கட்டணங்களை அடுத்த மாதம் (மார்ச்) 31-ந் தேதிக்குள் செலுத்தி சட்ட பூர்வமான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். மேலும் மாநகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு உதவிடும் வகையில் வரி இனங்களை செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story