டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை


டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெய்லர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(வயது 52). டெய்லர். இவருடைய மனைவி ஜெயலட்சுமி(45). கோத்தகிரி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்ைல.

இந்த நிலையில் பரமேஸ்வரன் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானார். தினமும் மது குடித்து வந்ததால், கடந்த 3 மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் உணவு சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு பரமேஸ்வரன் தூங்க சென்றார். பின்னர் நேற்று காலை 6.30 மணிக்கு அவரை எழுப்புவதற்காக ஜெயலட்சுமி அந்த அறை கதவை தட்டினார். நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த ஜெயலட்சுமி, ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.

அப்போது பரமேஸ்வரன் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குடும்பத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரமேஸ்வரனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்திருப்பதை உறுதி செய்தனர்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பரமேஸ்வரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரமேஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story