தங்கும் விடுதியில் டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை
தங்கும் விடுதியில் டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தங்கும் விடுதியில் டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டீ மாஸ்டர்
திருச்சி புத்தூர் குளத்துமேடு வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). டீ மாஸ்டரான இவர், கடந்த 20 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து உறையூரில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் தங்கி இருந்தார். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சைக்கிளில் சென்ற போது, கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக அவரை உறவினர்கள் துறையூருக்கு அழைத்து சென்றனர். அங்கு தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று வந்ததாலும், கவனிக்க ஆள் இல்லாததாலும், செல்வராஜ் மனமுடைந்தார். இந்தநிலையில், சிகிச்சை முடிந்து தான் தங்கி இருந்த விடுதிக்கு திரும்பி வந்த செல்வராஜ் நேற்று முன்தினம் விடுதி அறையில் உள்ள மின்விசிறி கொக்கியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.