டீக்கடைக்காரர் தற்கொலை
டீக்கடைக்காரர் தற்கொலை
சிவகாசி
சிவகாசி அம்மன்கோவில்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 60). இவர் சாத்தூர் ரோட்டில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தோணி, மனைவி சேவியர்மேரிக்கு போன் செய்து குழந்தைகளை பிரிந்து சிவகாசியில் தனியாக வசித்து வருவது மனதுக்கு கவலையாக இருக்கிறது என்று கூறி உள்ளார். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி காலையில் சேவியர் மேரி வழக்கம் போல் தனது கணவருக்கு போன் செய்த போது அவர் கணவர் போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அந்தோணியின் நண்பர் ஒருவருக்கு போன் செய்து நேரில் சென்று பார்க்க வலியுறுத்தி உள்ளார். அந்த நண்பர் அந்தோணி தங்கி இருந்த வீட்டில் சென்று பார்த்த போது அங்கு அந்தோணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து அவர் சேவியர்மேரிக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் குடும்பத்தினர் சிவகாசிக்கு வந்து அந்தோணியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து சேவியர் மேரி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.