ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.


ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.
x

உடுமலையில் எண்ணும் எழுத்தும் 2-ம் பருவத்திற்காக, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. பயிற்சி வகுப்புகள் நாளை வரை நடக்கிறது.

திருப்பூர்

உடுமலையில் எண்ணும் எழுத்தும் 2-ம் பருவத்திற்காக, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. பயிற்சி வகுப்புகள் நாளை வரை நடக்கிறது.

சிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின்படி, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் உடுமலையை அடுத்த திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான "எண்ணும் எழுத்தும்" 2-ம் பருவத்துக்கு, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு உடுமலை கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி, சர்தார் வீதியில் உள்ள நகராட்சி எக்ஸ்டன்ஷன் நடுநிலைப்பள்ளி, தளிசாலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்புகள் நாளை (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது.

பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பை உடுமலை ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் மனோகரன் தொடங்கி வைத்தார்.

எண்ணும் எழுத்தும்

பயிற்சியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் அவசியம், துணைக்கருவிகள் தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் பல்வேறு செயல்பாடுகளை, துணைக் கருவிகள் மூலம் கருத்தாளர்கள் செய்து காண்பித்தனர். ஆசிரியர்களுக்கான பயிற்சி கையேடு, மாணவர்களுக்கான பயிற்சி ஏடு, முதல் பருவத்துக்கும் 2-ம்பருவத்துக்கும் உள்ள வேற்றுமை ஒற்றுமைகள், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகள் ஆகியவைபற்றி விளக்கப்பட்டது.

நேற்று தமிழ் பாடத்திற்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் உடுமலை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 295ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) ஆங்கில பாடத்திற்கான பயிற்சி வகுப்பும், நாளை (புதன்கிழமை) கணித பாடத்திற்கான பயிற்சி வகுப்பும் நடைபெற உள்ளது. பயிற்சியை கருத்தாளர்களான கண்ணபிரான், லீலா கண்ணன், ஜெய்கணேஷ், கனகசுந்தரி, சந்திரசேகர், காயத்ரி, மங்கை மகமாயி, அய்யப்பன் ராம்குமார், சரவணக்குமார், பால் பிரதீப் உள்பட உடுமலை ஒன்றிய ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். உடுமலை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் இந்த பயிற்சியினை ஒருங்கிணைத்துள்ளனர்.


Related Tags :
Next Story