10-ம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஆசிரியர் போக்சோவில் கைது


10-ம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஆசிரியர் போக்சோவில் கைது
x

10-ம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஆசிரியர் போக்சோவில் கைது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 32). இவர் தனியார் உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் அந்த பள்ளி உரிமையாளரின் உறவினர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் தினேஷ், 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் தினேஷை பலமுறை கண்டித்தும் அதனை பொருட்படுத்தாமல் அந்த மாணவியை போனிலும், நேரிலும் தன்னை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் தங்களது மகளின் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டனர். இருப்பினும் தினேஷ் தொடர்ந்து அந்த மாணவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்ததாகவும், இதில் அந்த மாணவியும் ஆசிரியரை காதலிக்க தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் தினேஷை கைது செய்தனர்.


Next Story