போலி ஆவணங்கள் கொடுத்து ஜாமீன் கேட்ட ஆசிரியர் கைது
போலி ஆவணங்கள் கொடுத்து ஜாமீன் கேட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
திருச்சி பீமநகர் மேலகொசத்தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 35). இவர் தனியார் டியூசன் சென்டர் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது சமயபுரம், கொள்ளிடம் போலீஸ்நிலையங்களில் மோசடி வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் ஜாமீன் பெற, ஜமாத்தார் கொடுத்ததாக கூறி ஆவணங்களை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவர் கொடுத்துள்ளார். விசாரணையில், அவர் கொடுத்த ஆவணங்கள் போலி என்று தெரியவரவே, இதுபற்றி நடவடிக்கை எடுக்க திருச்சி பாலக்கரை போலீசாருக்கு கோர்ட்டு பரிந்துரை செய்தது. அதன்பேரில், இஸ்மாயில் மீது பாலக்கரை போலீசார் மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story