செக் மோசடி வழக்கில் ஆசிரியர் கைது


செக் மோசடி வழக்கில் ஆசிரியர் கைது
x

செக் மோசடி வழக்கில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

அம்பை:

விக்கிரமசிங்கபுரம் கட்டப்புள்ளி தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 54). இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சின்னதுரை கடந்த 4 ஆண்டுகளில் அப்பகுதியைச் சேர்ந்த பரமசிவன், ஆறுமுகம், மாரியப்பன் ஆகியோர்களிடம் செக் கொடுத்து கடனாக பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கேட்கும் போது, கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். .இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சின்னதுரை கொடுத்த செக்கை வங்கியில் செலுத்தி பணத்தை கேட்டனர். அப்போது, அவரது கணக்கில் பணம் இல்லாததால் செக் திரும்பி வந்தது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும், அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் இந்த வழக்கில் சின்னதுரை ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சின்னதுரையை நேற்று முன்தினம் விக்கிரமசிங்கபுரம் போலீசார் கைது செய்து, அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பல்கலைச்செல்வன், வருகிற 28-ந் தேதி வரை சின்னதுரையை காவலில் வைக்க உத்தரவிட்டார்.


Next Story