பணிச்சுமையால் ஆசிரியை தற்கொலை


பணிச்சுமையால் ஆசிரியை தற்கொலை
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே பணிச்சுமை காரணமாக அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

விழுப்புரம் மாவட்டம் டி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் அசாருதீன். இவருடைய மனைவி ஆயிஷா (வயது 31). இவர் திருவெண்ணெய்நல்லூர் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். ஆயிஷா அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஆயிஷாவுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக ஆயிஷா மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் வாடகை வீட்டில் நேற்று காலை 11.30 மணிக்கு அவர் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆயிஷா பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணிச்சுமை காரணமாக அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story