குளியல் அறையில் வழுக்கி விழுந்து, ஆசிாியை சாவு


குளியல் அறையில் வழுக்கி விழுந்து, ஆசிாியை சாவு
x

திருவையாறு அருகே குளியல் அறையில் வழுக்கி விழுந்துஆசிரியை உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு அருகே குளியல் அறையில் வழுக்கி விழுந்துஆசிரியை உயிரிழந்தார்.

ஆசிரியை

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மேலத்திருப்பூந்துருத்தி வரதராஜபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜான்டேவிட். இவருடைய மனைவி ரோஸ்லின்(வயது54). ஆசிரியையான இவர் நேற்று காலை வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்றார். அப்போது அவர் திடீரென குளியல் அறையில் வழுக்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரோஸ்லின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரோஸ்லின் மகன் ஜோன்ஸ்ஆல்பிரட் கொடுத்த புகாரின் பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story