டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர்கள் மேம்பாட்டிற்கான கருத்தரங்கம்


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர்கள் மேம்பாட்டிற்கான கருத்தரங்கம்
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர்கள் மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர்கள் மேம்பாட்டிற்கான வழிகாட்டல் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொ.சுவாமிதாஸ் வரவேற்றார். சென்னை, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருங்கால ஆசிரியர்கள் தங்களது திறனை எவ்வாறு மேம்படுத்த வேண்டும்? போட்டி தேர்வுகளுக்கு எவ்வாறு பாடங்களை நடத்த வேண்டும்? என்பது பற்றி சிறப்புரையாற்றினார். மேலும் கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடப்பொருள், கற்பித்தல், நோக்கங்கள், கற்றல் வெளிப்பாடு மற்றும் மதிப்பீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் முனைஞ்சிப்பட்டி மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் கோல்டா, தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், திருச்செந்தூர் குறு வள மையத்தின் பயிற்றுனர் மேடையாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். கல்லூரியின் உதவி பேராசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.


Next Story