இரு சக்கர வாகனங்கள் மோதி ஆசிரியர் பலி:விபத்து நடந்த இடத்தில் தடுப்புகள் அமைப்பு பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. நடவடிக்கை


இரு சக்கர வாகனங்கள் மோதி ஆசிரியர் பலி:விபத்து நடந்த இடத்தில் தடுப்புகள் அமைப்பு பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. நடவடிக்கை
x

பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. நடவடிக்கை

ஈரோடு

பெருந்துறை - குன்னத்தூர் ரோடு, பள்ளக்காட்டூர் அருகே, நேற்று முன்தினம் 2 இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இசை ஆசிரியர் ஒருவர் இறந்தார். இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகத்தை தொடர்பு கொண்டு, சம்பவ இடத்துக்கு வரவழைத்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது விபத்து நடந்த இடத்தில் வேகத்தடுப்புகளை (பேரிகார்டு) வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பெருந்துறை போலீஸ் சார்பில் பள்ளக்காட்டூர் பிரிவில், நேற்று காலை தடுப்புகள் (பேரிகார்டு) ரோட்டின் குறுக்கே வைக்கப்பட்டது.


Next Story