குறுவள மைய பயிற்சியின்போது பயிற்றுனரின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர் இடமாற்றம்


குறுவள மைய பயிற்சியின்போது  பயிற்றுனரின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர் இடமாற்றம்
x

குறுவள மைய பயிற்சியின்போது பயிற்றுனரின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம்


மரக்காணம் ஒன்றியம் ஓமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார வளமையம் சார்பில் கடந்த 18-ந் தேதியன்று குறுவள மைய பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் பயிற்றுனர் கோசலாவுக்கும் மொளசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியரான தபீத்தாள் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது

. இதில் ஆசிரியர் பயிற்றுனர் கோசலாவின் கன்னத்தில் தபீத்தாள், அறைந்துள்ளார். இதுகுறித்து திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணனுக்கு மரக்காணம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் மொளசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் புகார் கடிதம் அனுப்பினர்.

இது தொடர்பாக விசாரிக்கக்கோரி மரக்காணம் வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது. அவர், இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்பித்தார். அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் தபீத்தாளை மொளசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்து கீழ்பேரடிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story