ஆசிரியை பயிற்சி மாணவி தீக்குளித்து தற்கொலை


ஆசிரியை பயிற்சி மாணவி தீக்குளித்து தற்கொலை
x

ஆசிரியை பயிற்சி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

திருநெல்வேலி

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவை சேர்ந்தவர் தென்கரைமுத்து. பத்திர எழுத்தர். இவருடைய மகள் நீலாம்பரி (வயது 21). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் ஆசிரியை பயிற்சி பள்ளியில் முதல் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.

நேற்று காலையில் தென்கரைமுத்து எழுந்து பார்த்தபோது நீலாம்பரி உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பணகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பணகுடி போலீசார், மாணவி நீலாம்பரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story