ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்


ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
x

பாளையங்கோட்டையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நடந்தது

திருநெல்வேலி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடந்தது. மாவட்ட தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பிரம்மநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பால்ராஜ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். புதிய கல்விக்கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரிடமும் சென்று ஒரு லட்சம் கையெழுத்துக்களை பெற்று வருகிற 30-ந் தேதிக்குள் ஜனாதிபதிக்கு அனுப்புவது, ஆசிரியர்களுக்கு காலதாமதம் இன்றி மாத இறுதியில் ஊதியம் கிடைக்க கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் அமுதா நன்றி கூறினார்.


Next Story