அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு வந்த ஆசிரியர்கள்


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்    கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு வந்த ஆசிரியர்கள்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கோரிக்கை அட்டை அணிந்து ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர்.

கடலூர்


அண்ணாமலை நகர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வரும் தொகுப்பூதியர் மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஆசிரியர், ஊழியர்களுக்கு பதவி உயர்வு, ஓய்வூதியர்களுக்கு அனைத்து பண பயன் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்பன உள்பட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர், ஊழியர் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், ஊழியர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு வந்தனர். அப்போது அவர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேறவில்லை என்றால் வருகிற 7-ந் தேதி மாலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் இருந்து தொலைதூரக் கல்வி இயக்ககம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.


Next Story