தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி ஆசிரியர்கள் பிரசாரம்


தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி ஆசிரியர்கள் பிரசாரம்
x

தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி ஆசிரியர்கள் பிரசாரம் செய்தனர்.

பெரம்பலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் முன்பு பிரசார இயக்கம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அந்த கூட்டமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story