ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்


ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்
x

மயிலாடுதுறையில் ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கந்தன், நகர தலைவர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பார்களாக மாநில வெளியீட்டு செயலாளர் ஜெக.மணிவாசகம், மாவட்ட அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் மகத்தான திட்டத்தை தந்திட்ட தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் முத்துக்குமார், சுதாகர், துரை, முருகையன், கனகசபை, பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊர்வசி நன்றி கூறினார்.


Next Story