ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டப்பட்டது.
ஸ்ரீீவைகுண்டம்:
வல்லநாடு துளசி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவியர்களுக்கான வரவேற்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கல்லூரி தலைவர் ஹீமாயூன் கபூர் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் வன அதிகாரி பிருந்தா கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுஜாபாண்டியன் அம்மையார் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
* நாசரேத் அருகே பிள்ளையன்மனை ஜி.வி.ஞானமுத்து டி.என்.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, தாளாளர் ஆல்வின் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை இன்பவள்ளி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் டக்லஸ் அல்பர்ட் ராஜ் வாழ்த்தி பேசினார். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் திலகர், ஷம்மா அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* எட்டயபுரம் அருகே குமாரகிரி புதூரில் உள்ள சி.கே.டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு முதல்வர் நம்மாழ்வார் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் குருநாதன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பாடல்கள் பாடி ஆசிரியர்களை மலர் தூவி வாழ்த்தினா்.
* சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. தாளாளர் அந்தோணி பேட்ரிக் விஜயன் வரவேற்றார். அபிதா பிரபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். ஆசிரியர் பிரபாகர் நன்றி கூறினார்.
* சாத்தான்குளம் அருகே சிதம்பராபுரம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தாளாளர் இருதயசாமி, தலைமை ஆசிரியர்கள் ஜேசுராஜகுமாரி, சந்திரமதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.