திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா விலங்கியல் துறை சார்பில் கொண்டாடப்பட்டது. விலங்கியல்துறை 3-ம் ஆண்டு மாணவர் சரவணன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ரா.முத்துகிருஷ்ணன் ஆசிரியர் தின தலைமை உரையாற்றினார். விலங்கியல்துறை தலைவர் ச.சுந்தரவடிவேல் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் ஆசிரியர் தின சிறப்புரையாற்றினார். விலங்கியல்துறை பேராசிரியர் தே.வசுமதி ஏற்புரை நிகழ்த்தினார். 2-ம் ஆண்டு மாணவர் சிவநேசன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை விலங்கியல் துறை பேராசிரியர்கள் ஆரோக்கியமேரி பர்னாந்து, லிங்கதுரை, மணிகண்டராஜா ஆகியோர் மேற்பார்வையில் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story