ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்
30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேலூர் மாவட்ட கிளை சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. கல்வி மாவட்ட தலைவர் க.காசி தலைமை தாங்கினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் வில்வநாதன் முன்னிலை வகித்தார். கோரிக்கை குறித்து மாவட்ட துணைத் தலைவர்கள் வெங்கட்ராமன், சக்திவேல், தமிழரசி, மற்றும் துணைச் செயலாளர்கள் பேசினர்.
மாநில பொருளாளர் மத்தேயு சிறப்புரை ஆற்றினார்.
போராட்டத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.