ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்
நாகர்கோவிலில் ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 1-7-2022 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் ஒழுகினசேரி கே.என்.எஸ்.கே. அரசு பள்ளி வளாகத்தில் உள்ள தொடக்கக்கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று மாலை தர்ணா போராட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். நாகர்கோவில் கல்வி மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, டயஸ், சேவியர் பிரைட், ஜாஸ்மின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் சுரேஷ், திருவட்டார் கல்வி மாவட்ட தலைவர் சசிகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், ஆண்டனி சார்லஸ், மாநில பொது செயலாளர் பாலசந்தர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தர்ணா போராட்டத்தில் நிர்வாகிகள் சின்னதம்பி, செலின் ராணி, மைக்கேல், மோகனன், சுந்தர்ராஜ், டோமினிக்ராஜ், அய்யப்பன், கலைவாணன், ஹெர்பர்ட்ராஜா சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெஸி நன்றி கூறினார்.