விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் வாயிற்கூட்டம்


விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் வாயிற்கூட்டம்
x

வேலூரில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் வாயிற்கூட்டம் நடத்தினர்.

வேலூர்


தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு வாயிற்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்கண்ணா தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெயகுமார், இணை செயலாளர் ஜெயபிரகாஷ், தலைமையிட செயலாளர் திருகுமரன், மகளிரணி செயலாளர் தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அஜீஸ்குமார் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் கழக மாநில தலைமையிட செயலாளர் ராவணன், மாநில செய்தி தொடர்பாளர் எம்.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

கூட்டத்தில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், 2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்திட வேண்டும், அரசு பள்ளியில்1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவது போல் அனைத்து அரசு நலத்திட்டங்களும், சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் மலர்விழி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story