சத்தியமங்கலத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்தியமங்கலத்தில்  ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

சத்தியமங்கலத்தில் நேற்று மாலை வட்டார வள மைய வளாகத்தின் முன்பு ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் மாறுதல் செய்யப்படுவார்கள். இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார். சரத், அருள்மாறன், வேலுச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். சத்தி வட்டார ஆசிரியர்கள் 70 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


Related Tags :
Next Story