மாணவ-மாணவிகளை, ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்
வருகிற கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிட மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் ேகட்டுக் கொண்டார்.
வருகிற கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிட மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் ேகட்டுக் கொண்டார்.
பாராட்டு விழா
2021-22-ம் கல்வியாண்டில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டு விழா ஆகியவை நாகை ஐசக் நியூட்டன் கல்லூரியில் நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு நல்லாசிரியர் விருது பெற்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த 7 பேருக்கும், அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 31 ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை கலெக்டர் வழங்கினார்.பின்னர் அவர் பேசியதாவது:-
ஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த ராதாகிருஷ்ணனை போற்றும் விதமாக ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மாணவர்களை நற்பண்புகளோடு உருவாக்குவது ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் நாகை மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் 7 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும்.
100 சதவீதம் தேர்ச்சி
அதேபோல, மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 31 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அதேபோல வருகிற கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிட மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ், ஐசக் நியூட்டன் கல்லூரி தாளாளர் ஆனந்த் உள்பட கலந்து கொண்டனர்.