ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர பிறபணிகள் வழங்கக் கூடாது
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர பிறபணிகள் வழங்கக் கூடாது என்று பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர பிறபணிகள் வழங்கக் கூடாது என்று பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழைய ஓய்வூதியம்
தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் டி.ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சி.சேகர், பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படி 4 சதவீதத்தை கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர பிற பணிகளை வழங்கக்கூடாது. அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதாச்சார கணக்கெடுப்பு நடத்தி உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
கலந்தாய்வு மூலம்
நடுநிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால் அதனை கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து சங்க தேர்தல் நடைபெற்றது. இதில், மாநில பொதுச்செயலாளராக சி.சேகர், மாநில தலைவராக ரமேஷ்பாபு, பொருளாளராக முருகன் மற்றும் துணை பொதுச்செயலாளர்கள், மகளிரணி தலைவி, செயலாளர் உள்பட பல்வேறு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாவட்ட செயலாளர் சகேயு சத்தியகுமார் நன்றி கூறினார்.