பா.ஜ.க. பிரமுகர் மீது நடவடிக்கை கோரி ஆசிரியர்கள் போராட்டம்


பா.ஜ.க. பிரமுகர் மீது நடவடிக்கை கோரி ஆசிரியர்கள் போராட்டம்
x

பா.ஜ.க. பிரமுகர் மீது நடவடிக்கை கோரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் தஞ்சாவூர் அருணாச்சலம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் மேலாண்மை குழு கூட்டம் அதன் தலைவர் சோலைமலை தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடியும் தருவாயில் அங்கு வந்த கோட்டையூர் பேரூராட்சி கவுன்சிலர் திவ்ய குமாரியும், அவரது கணவரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி துணை தலைவருமான பாண்டித்துரை மற்றும் சிலர் அங்கு வந்து எங்களை அழைக்காமல் எப்படி கூட்டம் நடத்தினீர்கள் என்று கூறி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், பாண்டித்துரை மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது தொடர்பாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் சோலைமலை பள்ளத்தூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story