பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கலை கொண்டாடிய ஆசிரியர்கள்-மாணவர்கள்


பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கலை கொண்டாடிய ஆசிரியர்கள்-மாணவர்கள்
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-15T00:17:17+05:30)

தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர்கள்-மாணவர்கள் பொங்கலை கொண்டாடினர்.

தென்காசி

தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் புதிய பாஸ்கர் மற்றும் கல்யாணி புதிய பாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் சுந்தர்ராஜன் வரவேற்றார். சொக்கம்பட்டி வக்கீல் செந்தில் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி நிர்வாக அதிகாரி மணிகண்டன் நன்றி கூறினார்.


Next Story