ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
முக்கூடல்:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் பாப்பாக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் பாரதி காந்தி தலைமை தாங்கினார். மாநில அமைப்பு சுடலைமணி முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் அன்றோ குழந்தை ராஜேஷ் வரவேற்றார். ஆசிரியர்கள் நித்தியகல்யாணி, அனிசுவிட்லின், கண்ணன், சபரி, இளங்கண்ணன், அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில், ஆசிரியை ஸ்டெல்லா மேர்சி ராணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story