ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா


ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா
x

ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா நடைபெற்றது.

அரியலூர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பவள விழா, ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு மற்றும் உலக தமிழாசிரியர் பேரவை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் ரெங்கராஜனுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத்தின் வட்டார தலைவர் அருள்ஜோதி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவபாக்கியம் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலர் ரெங்கராஜன், துணைச்செயலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, பணி நிறைவு பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். பின்னர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும், அதற்கு அனைத்து ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதில் மாநில துணைத்தலைவரும், மாவட்ட செயலாளருமான எழில் கலந்து கொண்டு மாநில, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.


Next Story