இடைநிலை ஆசிரியர்கள் மண்டல கூட்டம்


இடைநிலை ஆசிரியர்கள் மண்டல கூட்டம்
x
திருப்பூர்

அவினாசி

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் (எஸ்.எஸ்.டி.எ) மண்டல கூட்டம் அவினாசியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. மாநில பொதுசெயலாளர் ஜே.ராபர்ட் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ச.ரெக்ஸ் ஆனந்தகுமார், துணைத்தலைவர் த.ஞானசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள எல்.பாலசுப்பிரமணியன், பாலசந்திரன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 700க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை புறம்தள்ளி இரண்டு விதமான இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டதை களையவேண்டும். முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்த்திட 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக முதல்அமைச்சர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனுவை அனுப்புவது, செப்டம்பர் மாதம் 48 மணிநேர அடையாள உண்ணாவிரதம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story