எண்ணும், எழுத்தும் திட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி


எண்ணும், எழுத்தும் திட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி
x

மயிலாடுதுறையில் எண்ணும், எழுத்தும் திட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

கொரோனா பரவல் காரணமாக நீண்ட விடுமுறையில் இருந்த மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு எண்ணும், எழுத்தும் திட்டத்தை தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக மாவட்டம் தோறும் கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு 2 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை, கொள்ளிடம், சீர்காழி, செம்பனார்கோவில், குத்தாலம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த தமிழ், ஆங்கிலம், கணித ஆசிரியர் கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்புகள் மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடந்தது. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில கருத்தாளர் பயிற்சி வகுப்பை குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் காமராஜ், மயிலாடுதுறை வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் கருத்தாளர்கள் அபூர்வா, கார்த்திக் ஆகியோர் பயிற்சி அளித்தனர். கருத்தாளர்களுக்கான பயிற்சி வகுப்பை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பாஸ்கரசேதுபதி, உதவி பேராசிரியர் ஏஞ்சலின்ரூபி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாமரைச்செல்வன், சீத்தாலட்சுமி, ஆசிரியர் பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story