தொழில்நுட்ப ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம்
வாழ்ந்து காட்டுவோம் திட்ட தொழில்நுட்ப ஆலோசகர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தேவையை பொறுத்து மண்டல, மாவட்ட, வட்டார அளவில் பண்ணைசார் தொழில்கள், குழுத் தொழில்கள் மற்றும் தனிநபர் தொழில்களை மேம்படுத்திடும் வகையில் ஒப்பந்த முறையில் பணிபுரிந்திட தொழில்நுட்ப ஆலோசகர்கள், தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேவையான கல்வித் தகுதி, பணி அனுபவம், நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்கள் அனைத்தும் https://www.tnrtp.org என்கிற இணைய தளத்தில் உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதள முகவரியில் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.