விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது
நாகப்பட்டினம்
திருமருகல் வட்டாரம் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் 2022-23 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தரமான விதை உற்பத்தி குறித்த தொழில் நுட்ப பயிற்சி, வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் மகேஸ்வரி பயிற்சியின் நோக்கம் மற்றும் விதைப்பண்ணையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி, விதை சான்று அலுவலர் மாறன், தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன் ஆகியோர் பேசினர். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஜெயராமன், தகவல் தொழில்நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story