விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி


விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

கடலூர்

விருத்தாசலம்

விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வேளாண் துணை இயக்குனர்(மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். அட்மா குழுத்தலைவர் குமார் முன்னிலை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் வேளாண் விஞ்ஞானிகள் பாஸ்கர், காயத்ரி, செங்குட்டுவன், சுந்தரய்யா ஆகியோர் பயிர்பாதுகாப்பு, உர மேலாண்மை, புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். தொடர்ந்து விவசாயிகள் தங்கள் பகுதியில் காணப்படும் விவசாயம் சார்ந்த வயல்வெளி பிரச்சினைகள் குறித்து விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினர். பயிற்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பாலமுருகன், முத்துசாமி ஆகியோர் செய்திருந்தனர். இதில் விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர் மற்றும் மங்களூர் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story