சிறுதானிய பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
முத்துப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
தொழில்நுட்ப பயிற்சி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம் அட்மா வேளாண்மை இணை இயக்குனர் முகமது ரபீக், வேளாண்மை துணை இயக்குனர்கள் லட்சுமி காந்தன், விஜயலட்சுமி ஆகியோரின் உத்தரவின்படி வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) திவ்யா வழிகாட்டுதல்படி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் முத்துப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
இதையொட்டி விவசாயிகள் கேரளா மாநிலம் அட்டப்பாடிக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் சிறுதானிய பயிர் குழும அலுவலர் பரதன், சிறுதானிய சாகுபடி முறைகள் பற்றியும், அதற்கான எந்திரங்கள் பயன்பாடுகள் பற்றியும் விளக்கம் அளித்தார்.
கம்பு- கேழ்வரகு
கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, பனி வரகு, சாமை, குதிரைவாலி, போன்ற பயிர்களை சாகுபடி செய்தல், பூஞ்சாண விதை நேர்த்தி, நுண்ணீர் உரங்கள் விதை நேர்த்தி, களை நிர்வாகம், பயிர் பாதுகாப்பு, இயற்கையான இடுபொருட்களை கொண்டு பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.