தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


லாலாபேட்டை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

இளம்பெண்

லாலாபேட்டை அருகே உள்ள கொம்பாடி பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி செல்வி (வயது 47), கூலிதொழிலாளி. இவர்களுக்கு 5 மகள்கள் இருந்தனர். செல்வராஜ் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின் 2-வது மகளான சுவேதா (26) திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார்.

இந்தநிலையில், பிள்ளபாளையத்தை சேர்ந்த வேன் டிரைவரான சண்முகபிரியன் (27) என்பவருடன் சுவேதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில், சண்முகபிரியனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஸ்வேதா பிள்ளபாளையத்தில் உள்ள சண்முகப்பிரியன் உறவினர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இளம்பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறிய அவரது உறவினர்கள் குளித்தலை அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேன் டிரைவர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உறவினர்களிடம் ேபச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சுவேதாவின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ேவன் டிரைவரான சண்முகப்பிரியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story