11 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலை


11 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலை
x

காட்டுமன்னார்கோவில் அருகே 11 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீரானந்தபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 28). இவர் காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அரியலூர் மாவட்டம் குழவடையான் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகள் கீர்த்தனா(23) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 11 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கீர்த்தனா, தனது 11 மாத ஆண் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கிய 2 பேரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக திருச்சிஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு கீர்த்தனா பரிதாபமாக இறந்தார். 11 மாத குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகேந்திரன், காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், வேல்முருகன் மற்றும் அவரது தாய் கோமதி, தந்தை கலியமூர்த்தி ஆகியோர் வரதட்சணைகேட்டு எனது மகளை கொடுமைப்படுத்தினர். இதனால் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்து விட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story