காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x

காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், புத்தானத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நந்தினி(வயது 26). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரும், சின்ராசு என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நந்தினி தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்எண்ணெயை உற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story