போலியான இணையதளத்தில் இளம்பெண் இழந்த பணம் மீட்பு


போலியான இணையதளத்தில் இளம்பெண் இழந்த பணம் மீட்பு
x

போலியான இணையதளத்தில் இளம்பெண் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை

போலியான இணையதளத்தில் இளம்பெண் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

கீழ்பென்னாத்தூர் தாலுகா கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா (வயது 25). இவர் ஆன்லைன் மூலம் இணையவழியில் கடன் பெறுவதற்காக முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது இவர் செல்போன் எண்ணுக்கு வந்த இணையதள லிங்க்கை கிளிக் செய்ததாக தெரிகிறது. இதனால் அவர் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரம் இழந்து உள்ளார்.

போலியான இணையதளத்தினால் பணத்தை இழந்ததை அறிந்து உடன் அவர் இழந்த பணத்தை மீட்டு கொடுக்குமாறு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்தார். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையிலான போலீசார் விசாரணை செய்து துரிதமாக செயல்பட்டு திவ்யா இழந்த பணத்தை மீட்டனர்.

இதையடுத்து அந்த பணத்தை திவ்யாவிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி ஒப்படைத்தார்.


Next Story