வாலிபர் தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள செங்கபடையை சேர்ந்தவர் பாண்டி மகன் விக்னேஷ்(வயது 27). பொம்மை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி அமராவதி (24). ஒரு மகள் உள்ளார். விக்னேஷ் கடந்த ஓராண்டிற்கு முன்பு தொழிலை விருத்தி செய்ய மினிவேன் வாங்கினார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்படவே தனது மினிவேனை உறவினர் ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்தார். இந்தநிலையில் அந்த வேன் காரைக்குடியில் வழக்கு ஒன்றில் சிக்கவே விக்னேஷ் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று விக்னேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story